குருளைச் சாரணர்களுக்கான சின்னம் சூட்டல் வைபவம் 12.08.2025
12.08.2025 செவ்வாய்க்கிழமை இன்று
வ/கருங்காலிக்குளம் அ.த.க.பாடசாலையில் முதல் முறையாக அதிபர் திருமதி. புனிதவதி கிருபராசா தலைமையில் குருளைச் சாரணத் தலைவர்களாகிய திரு.பூ.திசான், திரு.சி.ஹஜன் ஆகியவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் குருளைச் சாரணர்களுக்கான சின்னம் சூட்டல் வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இவ் விழாவில் பிரதம விருந்தினராக கோட்டக்கல்விப் பணிப்பாளர் (ஓமந்தை) திரு.சசிக்குமார் ஐயா அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக சாரணர் சங்கத்தின் மாவட்ட ஆணையாளர் திரு.கஜேந்திரன் அவர்களும் உதவி மாவட்ட ஆணையாளர் திரு.சந்திரமோகன் அவர்களும் உதவி மாவட்ட ஆணையாளர் (குருளைச் சாரணர்) திருமதி.அ.பிரியதர்சினி அவர்களும் சாரணர் சங்கத்தின் வவுனியா வடக்கு ஒருங்கிணைப்பாளர் திரு.சபேசன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். அத்துடன் பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
வவுனியா வடக்கு வலய குருளைச் சாரணத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு 28.03.2025
வவுனியா வடக்கு வலய குருளைச் சாரணத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு 28.03.2025 அன்று புளியங்குளம் ஆசிரியர் வள நிலையம் மற்றும் புளியங்குளம் இந்துக்கல்லூரி ஆகிய இடங்களில் இடம்பெற்ற பயிற்சிகளோடு இடம்பெற்றிருந்தது.
சாரண செயற்பாடுகளை வடக்கு வலயத்தில் விரிவுபடுத்த வேண்டும் என்ற வலயக் கல்விப் பணிப்பாளர் திரு து. லெனின் அறிவழகன் அவர்களின் நோக்கத்திற்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
பயிற்சிகள் சாரணர் தேசிய பயிற்சியாளர் திரு அஜித்குமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்றதுடன் மாவட்ட ஆணையாளர் மற்றும் மாவட்ட உதவி ஆணையாளர்கள் கலந்துகொண்டதுடன் சின்னம் சூட்டும் நிகழ்வைச் சிறப்பிக்கும் முகமாக கோட்டக் கல்விப்பணிப்பாளர் திரு சசிக்குமார் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.